போட்டோஷாப் என்றால் என்ன ?
போட்டோஷாப் ஒரு வரைகலை மென்பொருள். அதாவது கணினியில் நமக்கு தேவையான வடிவங்களை உருவாக்கவோ அல்லது வடிவங்களை மாற்றி அமைக்கவோ பயன்படும் ஒரு அசாத்தியமான மென்பொருள்.
எளிதாக புரியும்படி கூற வேண்டும் என்றால்
"கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனிங்/எடிட்டிங் சாப்ட்வேர்".
இன்று பயன்படும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் கணினியில் வரை கலை மூலம் படங்களை உருவாக்கவோ அல்லது அவற்றில் மாற்றங்கள் திருத்தங்கள் செய்யவோ பயன்படும் தன்னிகரற்ற ஒரு மென்பொருள் தான் போட்டோஷாப்.
ராஸ்டர் கிராபிக்ஸ் :
போட்டோஷாப் குறிப்பாக பிக்சல்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு வரைகலை மென்பொருள் அதாவது ராஸ்டர் கிராபிக்ஸ் எடிட்டர். ராஸ்டர் என்றால் பிட்மேப் என்று அர்த்தம் சரி பிட்மேப் என்றால் என்ன.
பிட்மேப் / பிக்சல் :
நாம் கணிதவியலில் அணிகள் பற்றி படித்திருப்பபோம் அதாவது MATRIX. இதே வடிவத்தில் தான் புள்ளிகளை நிறை மற்றும் நிரல்களாவும் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு பைனரி(வண்ணங்கள்) டேட்டா தான் பிட்மேப்.
புள்ளிகளை அடிப்படையாக கொண்டு அமைவதால் ஒவ்வொரு புள்ளியும் ஒரு பைனரி(வண்ணங்கள்) டேட்டாவால் நிரப்பப்படுகிறது இதில் ஒரு புள்ளிக்கு பெயர் தான் பிக்சல் அல்லது படவணு
ஆங்கிலத்தில் Pixel = Picture Element.
இந்த படத்தில் நீங்கள் காணும் ஒவ்வொரு சதுரமான புள்ளிக்கு பெயர் தான் பிக்சல்.
மேலும் தொடரும் ....
No comments:
Post a Comment