Wednesday, September 9, 2020

போட்டோஷாப் வரலாறு

 

Thomas KnollJohn Knoll


Thomas Knoll and John Knoll



இந்த பக்கத்தை படித்து விட்டு வந்தால் நன்றாக புரியும்....

போட்டோஷாப் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின்  நகரமான 
ஏன் ஆர்பர் - ல் பிறந்த இரண்டு சகோதார்களால் உருவாக்கப்பட்டது என்று நாம் அறிவோம்.

பிறப்பு : 
Thomas Knoll  April 14, 1960.
John Knoll       October 6, 1962. 

இதில் ஜான் ஸ்டார் வார்ஸ் ஹாலிவுட் படங்களை உருவாக்கிய இயக்குனர் ஜார்ஜ் லூகாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லூகாஸ் பிலிமின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்த  'இண்டஸ்டிரியல் லைட் அண்ட் மேஜிக்' Industrial Light & Magic (ILM) என்ற நிறுவனத்தில் விசுவல் எபக்ட்ஸ் மற்றும் CCO( chief creative officer) வாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதே காலகட்டத்தில் ஜானின் சகோதரர்  தாமஸ் அமெரிக்கா, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்  இமேஜ் பிராசஸிங் ஆராய்ச்சி படிப்பை படித்துக்கொண்டிருந்தார்

ஜான் பணியாற்றிய சில பிரபலமான  ஹாலிவுட் திரைப்படங்களை பார்க்கலாம்,
  • Star Wars 
  • Pirates of the Caribbean series
  • The Abyss
  • Mission: Impossible
  • Deep Blue Sea
  • Avatar
  • Mission: Impossible – Ghost Protocol
  • Pacific Rim
  • Aquaman 

இந்நிலையில் தான்  இருவரும் சேர்ந்து உருவாக்கிய மென்பொருளை வர்த்தக ரீதியாக வெளியிடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர். 


 1988-ன் இறுதியில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை  சேர்ந்த Steve Schaffran,  (Founder and Chief Operating Officer of Barneyscan) பார்னேஸ்கேன், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கான ஸ்கேனர் சாதனத்தை விற்பனை செய்து வந்த
நிறுவனம், முதன் முறையாக போட்டோஷாப் மென்பொருளை தனது ஸ்கேனர் சாதனத்துடன்  பார்னேஸ்கேன் எக்ஸ்பி (Barneyscan XP) என்று பெயர் மாற்றி வெளியிட முன்வந்தது.

மார்ச்-1989 ம் ஆண்டில் பார்னேஸ்கேன், Barneyscan XP[போட்டோஷாப்] version  0.65 அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் ஸ்கேனர் வரவேற்பை பெற்றதோ இல்லையோ மென்பொருளுக்கு வரவேற்பு கூடியது.

இறுதியில் Thomas Knoll தங்கள் உருவாக்கிய மென்பொருளுக்கு [போட்டோஷாப்] PHOTOSHOP என்று பெயரை மாற்றினார்.

Adobe நிறுவனத்தின் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வந்த Russell Brown-ன் முயற்சியால் அடோப் நிறுவனம் போட்டோஷாப்பை தங்களது நிறுவனத்துடன் இணைத்து கொண்டது.

1990-பிப்ரவரி-இல் போட்டோஷாப் முதல் பாதிப்பு அடோப் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.


இன்றைய தேதி செப்டம்பர்-09-2020-ன் படி 
போட்டோஷாப் வெர்சன் CC 2020 21.2.3.


செப்டம்பர்-09-2020 அன்று தான் வெர்சன் 21.2.3 வெளியிடப்பட்டது 8-ம் தேதி வரை வெர்சன் 21.2.2-வாகேவே இருந்தது.

இதிலிருந்து ஒன்று மட்டும் நிச்சயம் ... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் போட்டோஷாப் மேம்படுத்தப்பட்டு வருகிறது .......

மேலும் தொடரும்...


No comments:

Post a Comment