Photoshop

போட்டோஷாப் [Windows , Mac] விண்டோஸ் மற்றும் மேக் ஆகிய இரண்டு இயங்குதளங்களில் இயங்கும் மிகவும் பிரபலமான Adobe Systems நிறுவனத்தின் ஒரு வரைகலை மென்பொருள் ஆகும்,

போட்டோஷாப் முதன் முதலில் 1987-ல் Thomas Knoll  மற்றும் John Knoll இந்த இரண்டு சகோதரர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை மென்பொருளாகும்.

1988-ம் ஆண்டு Adobe Systems நிறுவனத்துடன் இணைந்து வர்த்தக ரீதியாக வெளிவந்தது.

முதன் முறையாக போட்டோஷாப்பிற்கு வைக்கப்பட்ட பெயர் Display. நிரல்கள் அனைத்தும் Apple Mac Plus கணினியில் MonoChrome மானிட்டர் பயன்பாட்டில் எழுதப்பட்டதால் படங்கள் அனைத்தும் வண்ணங்கள் இல்லாமல் கருப்பு வெள்ளையாகவே இருந்ததால் அதனை மாற்றி அமைக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 





தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619

என்ற வள்ளுவனின் கூற்றுப்படி கடுமையான முயற்சியின் பலனாக Display மென்பொருள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே   Macintosh II வண்ண மானிட்டர் கணினியில் அனைத்து நிரல்களும் மாற்றி எழுதப்பட்டு  படங்கள் அனைத்தும் வண்ணங்களில் தெரிந்ததால் ImagePro என்று பெயர் மாற்றி வைக்கப்பட்டது, ஆனால் அந்த பெயர் மாற்றுமொரு நிறுவனம் தனது மென்பொருளுக்கு இந்த பெயரை பதிவு செய்து இருந்ததால் இந்த பெயரும் நிலைக்கவில்லை.


இதன் பிறகு தான் Photoshop என்ற இறுதி பெயர் வடிவம் பெற்றது.


எனது கணினியில் போட்டோஷாப்-ன் புதிய பதிப்பு 


இன்று அணைத்து கணினியல் தொழில் பயன்பாட்டில் போட்டோஷாப் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.எடுத்துக்காட்டாக, புகைப்படத்துறை,சினிமா,வலைதள வடிவமைப்பு, 3D முப்பரிமாண வடிவமைப்பு என்று சொல்லி கொண்டே செல்லலாம்   


மேலும் தொடரும் ....



2 comments:

  1. நன்றிங்க சார்.. அறியாத்தகவல் அறிந்துகொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்க சார்

      Delete